ஓசை நயத்தோடு உள்ளத்தில் பதியவைப்பதற்காக இந்தக் குறளை இப்படிப் படித்திருப்போம்
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின்...
அறம்பிற -
செய்யாமை செய்யாமை நன்று"
இப்படிப் படித்ததால் அதன் பொருள்குறித்த ஒரு மயக்கத்தோடு, "அது எப்படி வள்ளுவர் அறத்தைச் செய்யவேண்டாம் என்று சொல்லியிருப்பார்" என்றக் கேள்வியோடு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். வாழ்க்கையில் நான் கடந்து வந்திருக்கிற ஐம்பது ஆண்டுகளும், சந்தித்த மனிதர்களின் பண்புகளும், குறளுக்கு உரையெழுதிய அறிஞர்களும், வள்ளுவரின் சொல்வன்மையும் கொடுத்தப் பட்டறிவு இந்தக் குறளைப் படிக்கிற முறையை எனக்குக் கற்றுத்தந்தது. அது...
"பொய்யாமை...
பொய்யாமை ஆற்றின் அறம்."
"பிற செய்யாமை...
செய்யாமை நன்று"
இப்பொழுது மடல் பிளந்தத் தென்னம்பூவின் மணிக்குருத்தாக இந்தக் குறளின் பொருள் வெளிப்படுவதைப் பாருங்கள்.
"பொய்யாமை"
பொய்யாமை என்பது ஒரு நற்பண்பு. பொய் சொல்லாமல் வாழ்வது. நிறைய பேரிடம் இந்தப் பண்பு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், வள்ளுவர் இந்தக் குறளிலே "பொய்யாமை" எனும் அந்த நற்பண்பை எப்படி அறமாகச் செய்வது என்று கற்றுத் தருகிறார்.
" பொய்யாமை ஆற்றின்"
பொய்யாமை எனும் இந்த நற்பண்பை, பொய்யாமை எனுஞ் செயல் வழி ஆற்றவேண்டும் என்கிறார் வள்ளுவர். நாம் இந்தப் பண்பு நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனாலும் நிறைய நிலைகளில் நாம் சிறு சிறு பொய்களைச் சொல்லிவிடுகிறோம். நான் அப்படியெல்லாம் இல்லையென்று யாரேனும் சொல்லக்கூடும். ஆனால் அது உண்மைதானா?
எங்கோ சாலையில் நடந்துகொண்டிருக்கிறபோது, எதிரே வந்து "ஐயா" என்று கைநீட்டும் இரப்போரிடம் இல்லையென்பது போல் தலையாட்டிவிடுகிறோம். அல்லது சில்லறையில்லை என்று சொல்லிவிடுகிறோம். வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு வெளியே நிற்கும் இரப்போரிடம் "கை வேலையாய் இருக்கு" என்று சொல்லிவிடுகிறோம்.
குழந்தைக்கு நாளைக்குப் பள்ளிக் கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது என்று உதவி கேட்கிற ஒரு முகமறிந்த மனிதரிடம் "என்ன நீங்க, இதெல்லாம் ரெண்டு மூணு நாளைக்கு முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?" "இன்னைக்கு காலையில் தான் இன்னொருத்தருக்குக் கொடுத்தேன்" என்று சொல்லி விடுகிறோம். ஒருவேளை அவர் திருப்பித் தராமல் போய்விடுவாரோ என்ற அச்சம் நமக்கு. ஆனால் நாம் யாருக்கும் தீங்கு செய்கிற விதமாய்ப் பொய் பேசியதேயில்லை. நடந்த உண்மைகளை மறைத்ததும் இல்லை. இது நற்பண்பு மட்டுமே. பொய்யாமை என்கிற இந்த நற்பண்பினை எந்த நிலையிலும் பொய்யின்றி ஆற்றவேண்டும். அப்பொழுதுதான் அது அறமாகும்.
நன்றாகப் பாருங்கள் வள்ளுவர் "செய்யின் அறம்" என்று சொல்லவில்லை. "ஆற்றின் அறம்" என்கிறார். ஆற்றுதல் என்ற இந்தச் சொல் அத்தனை மதிப்பு மிக்கது. தன்னலமின்றி, பிறர்க்கென, பிற உயிர்களுக்கெனச் செய்வதை அதையும் வலிந்து செய்யாமல் தன்னியல்போடு ஒன்றைச் செய்தலை "ஆற்றுதல்" என்கிறது தன்னேரில்லாத தமிழ். இப்பொழுது பொய்யாமை...பொய்யாமை ஆற்றின் அறம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
சரி. இப்படி இருந்துவிட முடியுமா? நம்மிடம் யாரேனும் பொருள், பணம் என்று ஏதேனும் உதவி கேட்டால் பொய்யாமை பற்றிநின்று நாம் எல்லாவற்றையும் இழந்துவிடக் கூடுமே. இதை ஏன் வள்ளூவர் நம்மிடம் சொன்னார் என்று எண்ணி மயங்கவேண்டாம். இந்தக் குறள் துறவறவியலில் வருகிறது. இந்த அறம் துறவிகளால் கடைப்பிடிக்கப்படவேண்டியது என வள்ளுவர் சொல்கிறார். இல்லறத்தானால் கடைப்பிடிக்க முடிந்தால் தவறொன்றும் இல்லை. ஆனால் துறவிகளுக்குப் பொய்யாமை அறமாக இருக்கவேண்டும் என்கிறார் ஐயன். துறவறத்திலிருப்பவரிடம் செல்வம் இருக்கப் போவதில்லை. இன்றைய துறவிகள் எப்படி என்று என்னைக் கேட்காதீர்கள். வள்ளுவர் சொல்கிற துறவி முற்றுந் துறந்தவர். பொருட்செல்வத்தின் மீது பற்று இல்லாதவர். உட்கார்ந்திருக்கும் ஓரடி நிலம் கூட தன்னுடையதில்லை என்று உணர்ந்தவர்.
சரி. இத்தனை துறந்த துறவி பொய்யாமை என்னும் பண்போடுதானே இருப்பார். அவரிடம் போய் ஏன் இதை பொய்யாமை ஆற்றின் என்று சொல்கிறார் வள்ளுவர். பொருள் மீது பற்றில்லாதவர் எங்கே பொய் சொல்லிவிடப்போகிறார்.
ஒரு துறவியிடம் அவரைச் சார்ந்து ஒழுகும் ஒரு சீடன் " ஐயா நானும் இத்தனை ஆண்டுகளாகத் துறவுபூண்டு உங்களோடு அலைந்து கடவுளைக் காணத் துடிக்கிறேன். இன்னும் முடியவில்லை. ஆதலால் நாளையே நான் என் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வதாய் வைத்துக் கொள்வோம். அதற்கு அந்தத் துறவி "இல்லை சீடனே, இன்னும் கொஞ்சநாட்களுக்கு இந்தத் துறவு வாழ்க்கையத் தொடர்ந்து வா." என்று அவன் அவன் உயிர்விடுவதைத் தடுக்கும் முகமாகச் சொல்கிறார். இப்பொழுது அவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்ற ஐயம் எழுகிறது. சீடன் தன் உயிரை மாய்த்துவிடக்கூடாது என்று அவர் அப்படிக் கூறினால் அவரைப் பற்றற்றத் துறவி என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்ற ஐயமும் எழுந்துவிடுகிறது. அதனால்தான் பொய்யாமையை துறவிகள் பொய்யாமல் ஆற்றுவதே அறம் என்று வள்ளுவப் பேராசான் சொல்கிறார். சீடன் இறப்பதைப் பற்றிக் கவலை கொண்டால் துறவு கேள்விக்குறியாகிவிடும்.
இந்த அறத்தோடு மட்டும் இருந்துவிட்டால் போதுமா?
"பிற செய்யாமை" என்று அடுத்துச் சொல்கிறார். துறவிகள் செய்யவே கூடாது என்று சொல்லப்படுகிற "செய்யாமைகளை" செய்யாமை நன்று என்கிறார். துறவிகளுக்குப் பழிசேர்க்கும் செய்யக்கூடாத செயல்களை செய்யாமலிருப்பதே நல்லது. அப்படியெனில் செய்யாமையைச் செய்கிறவர்கள் துறவிகள் இல்லை என்கிறார் பேராசான். துறவிகளில் நல்ல துறவி, கெட்டத் துறவி என்றில்லை. துறவி ஒருவர்தான். அவர் பொய்யாமையை அறமாகச் செய்வார், செய்யக் கூடாததைச் செய்யவே மாட்டார். இந்த இரண்டில் ஒன்றில் தவறினாலும் அவர் துறவியில்லை. எத்தனை எளிதான துல்லியமான அளவுகோலிது. இதைப் பயன் படுத்துவோம். மயக்கம் வேண்டாம்.
-----------------------------------------------------------
இதன் காணொளி கீழே இணைப்பில்
பொய்யாமை என்னும் அறம்

No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்