கூழ் அளாவி அரண்
செய்து
கூர்த்தமதி
அமைச்சு சொல்லி
கோனுக்கும்
அறிவுரைத்து
வாழும்
மனிதருக்கும்
வழிகள் சொல்லி
மறுபால் சேராத
மன்னு துறவுக்கு
நல்விதி
வகுத்து,
அறனோடு பொருள்
சேர்த்து
கூடிமுயங்கி
அடுநறாக் காமம்
பாடி முடித்த;
உலகத்
தாய்மொழியின்
ஒப்பில்லாப்
புலவனவன்.
மாந்தர்தம்
வாழ்வன்றி
மண் சிறப்போ மன்னவர்
சிறப்போ
கண்ணறியாக் கற்பனைச்
சிறப்போ
தற்சிறப்போ
ஏதும் இல்லா
சொற்சிறந்த அவன்
குறளே
தமிழ்மொழியின்
உயரெல்லை.
பன்னெடுங்காலமாய்த்
தமிழரினம்
முன்னெடுத்த
செருவொன்றின்
மூத்த படைக்கலமே
வைதிகம்
அறுத்தெறிந்த
எங்கள்
வள்ளுவன்
எழுத்தாணி.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்