Saturday, 4 January 2020

இன்னொரு கடவுள்??

கடவுள், மதம் குறித்து பேசுகிற போதெல்லாம், "முதலில் மனிதன் இயற்கையை வழிபட்டான்"  "இயற்கையின் அச்சந்தரும் செயல்களே அவனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது" என அறிஞர்களும், அறிவியலாளர்களும், நாத்திகம் பேசுபவர்களும் சொல்லக் கேட்கிறோம்.

"கடவுள் உலகத்தைப் படைத்தார்" "உயிர்களைப் படைத்தார்" "மொழிகளைப் படைத்தார்" அதனால் மனிதன் கடவுளை வழிபடுகிறான் என்றெல்லாம் மதம் குறித்துப் பேசுபவர்களும், ஆத்திகர்களும் (எல்லா மதங்களும் உள்பட) சொல்லக்கேட்கிறோம்.

இந்த இரண்டு கருத்துகளையுமே ஏற்றுக்கொள்ள ஒப்பவில்லை மனம். அது தருக்கம் செய்துகொண்டே இருக்கிறது.

1. இயற்கையின் இடி, மின்னல், மழை, புயல், வெயில், நெருப்பு இவற்றிற்கெல்லாம் அச்சப்பட்டு மனிதன் கடவுள் நெறிக்கு ஆட்பட்டான் எனில்; 

அ) ஏனைய விலங்குகளுக்கு அந்த அச்சம் இதுவரை வரவே இல்லையா?
ஆ) இந்த விலங்கு(மனிதன்) மட்டும் அச்சப்பட்டது ஏன்? 

2. கடவுள் எல்லாம் படைத்தார் என்றால்;

அ) படைத்தவற்றை ஏன் வேறு வேறாகப் படைத்தார்?
ஆ) நான் பேசும் மொழி அவருக்குப் புரியாதென்றால் என் மொழியைப் படைத்தது யார்?
இ) அவர் பேசும் மொழி எனக்குப் புரியாதென்றால் என் கடவுள் யார்?
ஈ) அன்பைப் படைத்தது யார்? அணுக்குண்டு படைத்தது யார்?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்