பாடல் -3 விளக்கம்
கண் காது வாய் மூக்கு மெய்யென உருவ இழைப்பில்லாத இலிங்கவடிவை நிறுத்தி, தாழக்குடியில் புதிய கோயில் அமைத்தான் செழியன் சேந்தன். கி.பி. 625-640 க்குள் கட்டப்பட்ட இந்தக் கோயில் சிவனுக்காக மட்டுமே அமைக்கப் பெற்றது. சிவனுக்கு அருகில் அமரும் மலைமகளுக்குக் கோயில் கட்டப்படவில்லை. பிற்காலத்தில் (ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்குப் பின்னே அழகம்மைக்குக் கோயில் கட்டப்பெற்றது)
வழமையாகக் கோயில்களில் கருவறை வாயில் சிறியதாகவே இருக்கும். சில கோயில்களில் மட்டும் பெரியதாக இருக்கும். சேந்தன் எழுப்பிய இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு, இதன் கருவறை நடை யானை நுழைந்து வெளிவரும் அளவிற்குப் பெரியது. அது குறித்தச் சிற்பங்களும் கருவறை வெளிச்சுவரில் காணக்கிடைக்கின்றன. இரண்டாவது பாடல் குறிப்பிடும் “சித்திரைப் பத்துக் கதிரொளி நுழைவு” நிகழ்வுக்கு அடித்தளமிட்டதே இந்தப் பெருவாயில் நுணுக்கமாக இருக்கலாம்.
சேந்தனுக்குப் பிந்தைய மன்னரின் திருப்பணிகளும் இதையே தொடர்ந்ததால் இப்பொழுது கோயிலின் முன் நின்று பார்த்தால் கருவறை வரை பெருநடைகள் உயர்ந்து, மாபெரும் காட்சியாய் கண்முன்னே விரியும்.
சொற்பொருள்:
உருவறை - செம்மையான உருவில்லாத
புத்தன் - புதிய
அருகுறை - அருகில் இருக்கின்ற
அம்மை - மலைமகள்
பெருநடை - பெரிய வாயில்
தளி - கோயில்
பாடல் : இன்னிசை வெண்பா
உருவறை ஈசர் உறைந்திட புத்தன்/
கருவறை கட்டினான் சேந்தன் செழியன்/
அருகுறை அம்மைக் கிடம ளியாது/
பெருநடை கொள்த ளியே/
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்