கருவறையும் மண்டபமும் இணையும் இடம். இடது: செழியன் சேந்தன், வலது: வீரகேரளன் |
பாடல் 5: வீரகேரளன் திருப்பணி விளக்கம்
சேந்தன் கட்டிய பெருவாயில் கொண்ட கருவறையும் முன்பக்கம் நின்று தொழும்படியான திறந்த சிறு மண்டபமும் கொண்டு நின்றிருந்தது சேந்தநாதன் கோயில்.
ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் கிபி 1125ல் மன்னன் வீரகேரளன் உயர்ந்த ஒரு மணிமண்டபமும், சிறப்பான ஒரு நாடகச்சாலையும் அமைத்தான். வெளிப்புறம் சிறந்த வேலைப்பாடுகளுடனும் உள்ளே தூண்களில் சிற்பங்களுடனும் காட்சியளிக்கிறது மணி மண்டபம். அதனுள்ளும், நாடகச்சாலையிலும் இசைக்கலைஞர், கூத்தர் சிற்பங்கள் உண்டு. காற்று நுழைந்து வெளியேற, வெளிச்சம் வர சிறப்பான பெரிய சாளர அமைப்பும் உண்டு. நாளும் சந்தனம் அரைத்துப் பூச உரைகல்லும் மேடையும் காணப்பெறுகிறது. திட்டமிட்டு வெகு சிறப்பாகக் கட்டப்பட்டது இந்த உயர்ந்த அகன்ற மண்டபம்.
பொருள் விளக்கம்:
முன்றில் - முற்றம்
அறநிலை - கோவில்
வரையறை - திட்டமிட்ட சிறப்பான அளவுகளில்
பாடல் :5 வீரகேரளன் திருப்பணி விளக்கம்
சிறுமுன் றிலொடு கருவறை கொண்ட/
அறநிலை கண்டும னக்குறை கொண்டு/
வரையறை செய்துயர் மண்டபந் தந்தான்/
பெருவீ ரகேரள னாம்./
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்