பாடல் 7 அழகம்மைக்கு கோயில் கட்டப்பட்டது
கி.பி. 625-640 சேந்தன் செழியனால் கருவறை கட்டப்பட்டு, கி.பி.1125ல் பெரிய மண்டபங்கள் கட்டப்பட்டும் பலகாலம், ஏறத்தாழ கி.பி 1325 வரை சிவன் கோயில் மட்டுமே பெரியதாக இருந்திருக்கிறது. அம்மைக்குக் கோவில் இல்லை. அதன்பிறகே “அழகம்மை” அருகில் இருத்தப்பட்டிருக்கிறாள். வீர கேரளன் கட்டிய கோயிலில் இடப்புறம் இடம் இல்லாத காரணத்தால் “அழகம்மை” வலப்புறம் அமைக்கப்பட்டாள். நிறைய கோயில்களில் இந்த அமைப்பைப் பார்க்கலாம்.
கட்டப்பட்ட காலத்தில் பாண்டியன் வீரபாண்டியனது ஆட்சியில் இந்தப் பகுதி இருந்திருக்கலாம்.
மற்றொன்று;
தென்காசிப் பாண்டியர்களின் சின்னமான கொம்புடைய மகரமீன் முன்பக்க மண்டபத்தில் காணப்படுகிறது. என்றால் சீரமைப்பு கி.பி. 1460 சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலமாகவும் இருக்கலாம்.
எப்படியென்றாலும் அழகம்மைக்கான கோவில் பிற்காலத்தையதே என்பது உறுதிப்படுகிறது.
சொற்பொருள்:
சேந்தன் - சிவன்
தனியனாய் - இலிங்கம் மட்டுமே
ஏந்திழை - இங்கே மலைமகள்
இழைத்தல் - செதுக்கிச் செய்தல்
தளி - கோவில்
பாடல் 7 அழகம்மைக்கு கோயில் கட்டப்பட்டது
சேந்தனாய் செவ்வேள் சிவனாய் தனியனாய்/
மாந்தர்தொ ழும்தாழை யம்பதியு டையாரோ/
டாண்டுப லத்தாண் டியபின் வலப்புறத்தே/
ஏந்திழைக்கி ழைத்தார் தளி./
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்