பதினோராம் வகுப்பில் படிக்கும் போது தமிழாசிரியர் திரு அழகப்பபிள்ளை அவர்கள் "நீ தமிழ் படி. கரந்தையில் போய் படி. ஆசிரியராக, விரிவுரையாளராகப் போ. அது உனக்கு சிறந்த பணியாக இருக்கும். அப்பாவிடம் சொல்கிறேன்" என்று சொன்னதோடு மட்டுமின்றி அன்று மாலையே தந்தையாரிடமும் சொல்லியிருக்கிறார். நாங்கள் இருவரும் அவர் சொன்னதைக் கேட்கவில்லை.
நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தது 1983ல். காலை 9:40 வரை மாவட்ட மைய நூலகம். அங்கிருந்து நடந்து கல்லூரி. கல்லூரியில் பிடித்த இடங்கள் வடக்கு வாயிலில் தொடங்கும் மரங்களடர்ந்த நடை பாதை. நூலகம், சிற்றுண்டிச் சாலை. சில நேரங்களில் வகுப்பறை.
ஏறத்தாழ நாநூறு பக்கங்களுக்குக் கவிதைகள். எழுபது பக்கங்களில் சிறுகதைகள். அவற்றையெல்லாம்