கோடரிக் காம்புகள்
துளிர்க்கும் என்பதெல்லாம்
கனவுக்குள் கனவே.நேற்றிரவு அந்தக் காணொலியைப் பார்த்ததிலிருந்து மன வருத்தமும் உளைச்சலும் ஆட்கொள்ள, களைப்போடு இருக்கின்றேன்.
இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்ற தஞ்சை இராமையாதாசின் பாடல் உள்ளத்தின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்! என்று பாரதி ஒருபுறம் புலம்புகிறான்.
அப்படியெதுவும் நிகழாது என்று "முதலெனப்படுவ"தென்ற தொல்காப்பியமும், "தருக்கமும்" பழந்தமிழர் "விண்ணியலும்" சொல்லிச் சென்றுவிட்டனவே பாரதி. நீ அறியாதிருப்பாயா? அவற்றையெல்லாம் அறிந்தவர் தாமே ஏமாற்றுகிறார்.
இல்லையென்று மறுப்பீராயின் அறியாது உளறுகிறார் என்றாவது உரைப்பீர்.
பாவம் பலர். மந்தை மந்தையாய்...
27-05-2024
(ஆசிரியப்பா)
காலத்தின் கைகளை
விட்டுவிட்டு
நடக்கிறேன்.
எனக்கு முன்னால்
வெகுதொலைவில்
நரை திரை மூப்பெய்திய
ஒரு பள்ளித்தோழன்.
எனக்குப் பின்னால்
கூப்பிடு தொலைவில்
வகுப்புத் தோழி.
காலத்தின் கைகளை
விட்டுவிட்டு
நடக்கிறேன் நான்.
வடந்தைத்தீ vaḍandaittī, பெ. (n.) வடதிசை நெருப்பு (L.);; aurora borealis.
ஆடு
āṭudal,
செ.கு.வி. (v.i.)
1.
அசைதல்; to move, to wave, to swing, to shake, to
vibrate.
2.
கூத்தாடுதல் (பிங்.);; to dance, to gesticulate,
to play. "அம்பலத்தாடுவான்"
(பெரியபு. கடவுள் வா);.
3.
விளையாடுதல்; to play. "அகன்மலையாடி"
(மணிமே. 10:55)
4.
நீராடுதல்; to bathe, to play in water.
5.
அசைந்தாடுதல், மென்மெல
அசைதல்; to sway. தென்றலில் பூங்கொடி
அசைந்தாடுகிறது.
6.
ஆலையாடுதல், ஆலையிலிட்டு
அரைத்தல்; to crush in a machine இன்றுதான்
கரும்பு ஆலையாடி முடிந்தது.
7.
இணலாடுதல்-புணர்தல்; to copulate, as snake do. பாம்பு
இனலாடுகிறது.