நேற்றிரவு அந்தக் காணொலியைப் பார்த்ததிலிருந்து மன வருத்தமும் உளைச்சலும் ஆட்கொள்ள, களைப்போடு இருக்கின்றேன்.
இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்ற தஞ்சை இராமையாதாசின் பாடல் உள்ளத்தின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்! என்று பாரதி ஒருபுறம் புலம்புகிறான்.
அப்படியெதுவும் நிகழாது என்று "முதலெனப்படுவ"தென்ற தொல்காப்பியமும், "தருக்கமும்" பழந்தமிழர் "விண்ணியலும்" சொல்லிச் சென்றுவிட்டனவே பாரதி. நீ அறியாதிருப்பாயா? அவற்றையெல்லாம் அறிந்தவர் தாமே ஏமாற்றுகிறார்.
இல்லையென்று மறுப்பீராயின் அறியாது உளறுகிறார் என்றாவது உரைப்பீர்.
பாவம் பலர். மந்தை மந்தையாய்...
27-05-2024
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்