இதுவரை;
யாரும் எச்சில்
படுத்தியிராத
சொற்கள்
தேடியெடுத்து,
உனக்கொரு
கவிதை எழுதுகிறேன்.
இதுவரை;
யாழ் நரம்புகள் சிந்தியிராத
இசைத் துணுக்குகள் சேர்த்து,
அதைப்
பாடலாய்
இசைக்கிறேன்.
ஓசைகளற்ற காற்றில் மிதந்து
உன் காதுகளில்
சொல்லிவிட
நினைக்கிறேன்.
உதடுகள் உரசும் ஓசை
காது மடல்களைக்
காயப்படுத்திவிடுமோ?
ஐயம் எழுந்ததால்
மௌனம் பழகுகிறேன்…
என்றேனும் இசைத்துவிடும்
ஆசையைச் சுமந்தபடி.
29-12-2024